Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, செப்.25: 2027ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்ககுறிப்பேடு மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in< http://www.skilltraining.tn.gov.in/ > என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தேர்வு கட்டணத்தை (ரூ.200/- மட்டும்) www.karuvoolam.tn.gov < http://www.karuvoolam.tn.gov/ >.in என்ற என்ற இணைய தளத்தின் வழியாக மூலம்செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய புதுகை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.