அறந்தாங்கி, செப். 23: அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. செந்தாமரை தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாலை 3 மணி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி வருவதால் அலுவலக வெளிப்புற கேட் மற்றும் முகப்பு வாயில் வரை கதவுகள் மூடப்பட்டு அதிரடி ரெய்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement


