புதுக்கோட்டை, செப். 23: புதுக்கோட்டை மாவட்டம் இராணியார் அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் முகமது பர்வேஸ் மாணவிகளுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது: இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பள்ளி மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் புதுகை ஊரக பகுதிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 518 பள்ளிகளில் 43,435 மாணவர்களும், நகர்ப்புர பகுதியில் 39 பள்ளிகளில் 4727 மாணவர்களும் ஆக மொத்தம் 557 பள்ளிகளில் 50,180 மாணவர்களும் பயன்பெறுவர்.
பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலை உணவினை தவிர்ப்பதால் மிகுந்த சோர்வுடனும், கவனிப்புத் திறன் குறைந்தும், கவனச்சிதறலுடன் காணப்படுவதை தவிர்க்கும் பொருட்டு கல்வியில் மாணவர்கள் போதிய கவனம் செலுத்திட 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் இத்திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்படுகிறது.


