புதுக்கோட்டை, செப். 23: புதுகையில் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நீதிபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு சமரச தேர்வு மையம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை மாவட்டம் சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் இணைந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் இந்த சமரசத் தீர்வு முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் வழக்கறிஞர்களும், வழக்காடிகளும், தங்களது வழக்குகளில் விரைவான தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளும் வகையிலும் தேசிய சமரச தீர்வு சிறப்பு முகாம் 1-10-2026 முதல் 31-12-2026 வரை நடைபெற உள்ளது. இந்த சமரசம் தீர்வு முகாம் பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு பேரணியை புதுகை மாவட்ட சமரச தீர்வு மையம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதி ஹெர்மிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


