Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கட்சி துண்டுடன் நுழைந்து அரசு பள்ளி விழாவில் அரசியல் பேசிய தவெகவினர்

புதுக்கோட்டை, ஜூன் 23: புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கலீப் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் கட்சித் துண்டுடன் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி தொடங்குவதற்கு முன்பே வழக்கமாக மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியிருந்த நிலையில், இந்தத் தவெக நிகழ்ச்சியை அரசு விழா போல் நடத்துவதாகக் கூறி, நிர்வாகிகளின் வற்புறுத்தலால் மாணவர்கள் மீண்டும் ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்து பாட வைக்கப்பட்டனர். இது அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, பள்ளி என்றும் பாராமல் மேடையில் பேசிய கட்சி நிர்வாகிகள், தவெகவின் கொள்கைகள் குறித்தும், முதலமைச்சர் எப்படி வெற்றி பெற்றார் என்பது குறித்தும் அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் மாணவர்களிடம் பேசினர். மேலும், விஜய் முதலமைச்சர் ஆனதற்கு நீங்கள்தான் காரணம், உங்கள் பெற்றோர் மற்றும் பாட்டியிடம் கூறி விஜய்க்கு வாக்களிக்கச் சொன்னதால் தான் அவர் வெற்றி பெற்றார். அதற்காகவே உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என சிறுவர்களின் மனதில் நஞ்சை விதைப்பது போல் அரசியல் பேசி நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, தவெக நிர்வாகிகள் நான்கு பேர் கொண்ட குழுவினர், வகுப்பறை மற்றும் மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடங்களைச் சுற்றிச் சுற்றி வந்து தங்களது செல்போன்களில் ‘ரீல்ஸ் எடுத்தனர்.

அரசுப் பள்ளி வளாகத்திற்குள் விதிகளை மீறி அரசியல் கட்சியினர் நுழைந்து, மாணவர்களிடம் அரசியல் பேசிய இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு வீடாகச் சென்று நோய்த்தொற்றைக் கண்டறியும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் அங்கீகாரத்திற்கும் பணியாளர் அடையாள அட்டை வழங்க வேண்டும். பள்ளி என்றும் பாராமல் மேடையில் பேசிய கட்சி நிர்வாகிகள், தவெகவின் கொள்கைகள் குறித்தும், முதலமைச்சர் எப்படி வெற்றி பெற்றார் என்பது குறித்தும் அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் மாணவர்களிடம் பேசினர்.