Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருமயம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி போலீசார் விசாரணை

திருமயம்.ஆக.21: சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டினம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (59). இவர் நேற்று முன்தினம் இவரது பைக்கில் திருமயத்தில் இருந்து திருமயம் - மதுரை பைபாஸ் சாலையில் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருமயம் கோர்ட் பகுதியில் உள்ள வாரியப்பட்டி விலக்கு சாலை அருகே சென்ற போது அதிமேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு பைக் சுப்பிரமணியன் சென்ற பைக் மீது மோதியது. இதில் உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சுப்பிரமணியனை மீட்டு ஆம்புலன்ஸில் திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.