Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,ஆக.21: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ராஜசேகர் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மன்றம் சண்முகநாதன் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விளக்க உரையாற்றிப் பேசியதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த பழைய ஓய்வு திட்டத்தை அறிவிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். ஆசிரியர்களின் தகுதி தேர்வு பிரச்சனையில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர தமிழநாடு அரச தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

பட்ஜெட்டில் கல்விக்கான நிதியினை குறைத்திருப்பதையும், ஓய்வூதியத்திற்கான ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்துள்ளதையும் உடனடியாக அதற்கான விளக்கத்தினை நடப்பு பட்ஜெட் கூட்டத்திலே தெளிவுபடுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும் எனப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் திருப்பதி, சரவணன் ஆனந்தகுமார் ஜெயராஜ், பன்னீர்செல்வம், சாலை வேலம்மாள்,நாகராஜ், ரவிச்சந்திரன், ராஜசேகர், ஆரோக்கியசாமி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.