Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செழிப்புடன் வளர்ந்து வரும் நெற்பயிர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் நூலகம் திறக்கப்படுவது எப்போது?

புதுக்கோட்டை, ஜூலை 20: மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் நூலகம் திறக்கப்படுவது எப்போது? என்று வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் 1ம் வீதியில் 2021-22ம் நிதி ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்டப்பட்டது. ஆனால், இது நாள் வரை நூலகம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு நூலகம் கொண்டுவரப்படவில்லை. காந்தி நகர் பகுதியில் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், மேற்படி நூலகம் திறக்கப்பட்டால் அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு பேரூதவியாக இருக்கும். எனவே, கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்ட காந்தி நகர் நூலகத்தை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு வாலிபர் சங்கத்தின் கிளைத் தலைவர் பாவேந்தன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாநகரச் செயலளார் தீபக், பொருளாளர் இதயம் முரளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.