Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அரிமளம் அருகே ராயவரம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

திருமயம், மே 20: அரிமளம் அருகே அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ராயவரம் முத்துமாரி அம்மன் கோவில் சித்திரை, வைகாசி திருவிழா கடந்த 4ம் தேதி பூச்சொரிதல் விழா, 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் பத்து நாள் மண்டகப்படி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், வீதி உலா நடத்தப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு ராயவரம் அண்ணா சீரணி கலையரங்கில் பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.