Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்கக்கூடாது மீன்வளத்துறை அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக. 18: வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும், கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக்கூடாது என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், படகுகளைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்குமாறும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.