இலுப்பூர், ஆக. 18: அன்னவாசல் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் சுதந்திர தினத்தன்று மது பாட்டில்கள் பதுக்கி கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு ரகசிய தவகல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீகம்பட்டி பேருந்து நிலையம் அருகே இதே பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி(46). என்பவர் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து 36 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement



