Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பொன்னமராவதி பகுதியில் இடி மின்னலுடன் பரவலாக மழை

பொன்னமராவதி, ஜூன் 19: பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் இப்பகுதி குளிர்ச்சியடைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் வெளியில் போக முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் என பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இப்பகுதியில் குளிர்ச்சியாக காணப்பட்டது.  இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் இப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது.