கந்தர்வகோட்டை, ஆக.18: சங்கம்விடுதி ஊராட்சியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி விஷ பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சேகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதி ஊராட்சியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பெரியநாயகி(70). இவர் தினசரி விவசாய கூலி வேலைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அவர் அருகில் உள்ள இடையன்கொல்லைபட்டிக்கு என்ற கிராமத்திற்கு கடலை மகசூல் சேகரிக்கும் வேலைக்கு சென்று உள்ளார். அப்போது எதிர்பார விதமாக கட்டுவிரியன் பாம்பு கடிந்து சம்பவ இடத்தில் மரணம் அடைந்தர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்கு புதுக்கோட்டை அரசு மருந்துவ கல்லூரி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
+
Advertisement



