புதுக்கோட்டை ஆக.18: அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 11-வது மாநாடு பேரணி பொதுக்கூட்டம் ஆலங்குடியில் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 11 ஆவது மாநாடு ஆலங்குடியில் ஆகஸ்ட் 16, 17 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. மாநாட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆலங்குடி மேகலா திரையரங்கம் அருகில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோரிக்கை முழக்கங்களுடன் பேரணி நடைபெற்றது. பேரணி காந்தி பூங்கா அருகில் தோழர் எஸ்.ரெகுநாதன் நினைவுத் திடலில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
+
Advertisement




