Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

15 வயதிற்கு உட்பட்டவர்கள் பிறப்பு சான்றிதழுக்கு பதிவு செய்ய கால அவகாசம் நீடிப்பு: கலெக்டர் அறிவிப்பு

புதுக்கோட்டை, ஜூன் 18: பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறப்பு 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்புச் சான்றிதழ் பெற பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் 1969 வழிவகை செய்கிறது. குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும்.

பெயர் இல்லா பிறப்புச் சான்றிதழினால் அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் எந்த பயனும் இல்லை, பிறப்புச் சான்றிதழ், குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், மற்றும் வயது குறித்த முடிவான ஆதாரமாகவும் விளங்குகிறது.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின், அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம்.