Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுக்கோட்டையில் ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, செப். 17: ஒப்பந்த செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாமென கலெக்டர் தெரிவித்தார்.

இதுகுறித்து கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய நலத் திட்டம், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், புதுக்கோட்டை மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் NHM திட்டத்தின் கீழ் காலியாக உள்ள (158) ஒப்பந்த செவிலியர்களின் பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் (ரூ.21,000- மாதம்) மாவட்ட நலச் சங்கம் மூலமாக நிரப்பிட 12.09.2026 அன்று முதல் 25.09.2026 அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான செவிலியர்கள் விண்ணப்பங்களை மாவட்ட இணையதளம் மூலமாக https://pudukkottai.nic.in/ பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த சுய சான்றொப்பமிட்ட, 10ம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ், செவிலியர் படிப்பு (B.Sc Nursing / DGNM) மதிப்பெண் சான்றிதழ்கள், தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவு சான்றிதழ், இருப்பிட சான்று ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் சாதிச்சான்றிதழ், முன்னுரிமை சான்று ஆகியவற்றுடன் இணைத்து விண்ணப்பிக்கவெண்டும்.

மாவட்ட சுகாதார அலுவலகம், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622 001. இதற்கு முன்பாக விண்ணப்பம் அளித்திருந்தாலும் தற்போது 12.09.2026 அன்று முதல் 25.09.2026 அன்று மாலை 5.00 மணி வரை கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்மே பரீசிலிக்கப்படும். ”காலிப்பணியிட எண்ணிக்கைகள் மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பம் நேரில் அல்லது தபால் மூலமாக வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 25.09.202 மாலை 5.00 மணி என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.