Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கறம்பக்குடி அருகே சுய உதவிக்குழு கட்டிடம் கட்டித்தர வேண்டும்

கறம்பக்குடி, செப். 17: கறம்பக்குடி அருகே சுய உதவிக்குழு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வாண்டான் விடுதி ஊராட்சி காணப்படுகிறது. இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி குழந்தைகளின் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களின் நலம் கருதி 2012-13ம் ஆண்டு அரசு தொடக்கப்பள்ளி அருகே புதிய சமையலறை கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்த சமையல் கூடமானது. நாளடைவில் பழுதடைந்து செடி, கொடிகள் மண்டி படர்ந்து சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து. ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. அதன் அருகே பள்ளிக்கூடம் அமைந்துள்ளதால் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகளின் நலன் கருதி பழுதடைந்து அங்கன்வாடிக்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளிக்கு உட்பட்ட சமையலறை கூடத்தை இடித்து அப்புறப்படுத்தி அதே இடத்தில் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டித் தர வேண்டும் என தமிழக அரசுக்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.