கறம்பக்குடி, செப் 17: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் பல ஆண்டுகளாக முக்கியமான பிரதான சாலைகளில் உள்ளன. இந்த சாலையின் ஆக்கிரமிப்புகளை 10ம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென பேரூராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை எச்சரிக்கை விடப்பட்டது அதனை அடுத்து நேற்று காலை பேரூராட்சி நிர்வாகம் வருவாய் துறை நிர்வாகம் இரண்டு துறையும் சேர்ந்து சீனி கடைமுடக்கம் அம்புக்கோவில் முக்கம் திருவோணம் சாலை வரை ஆக்கிரமிப்பு வரை முழுமையாக அகற்றினர் காவல் துறை பாதுகாப்புடன் அகற்றப்படும் பிறகு சாலையின் ஓரத்திலேயே மின்வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பங்கள் ஏராளமாக உள்ளது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு போக்குவரத்தை போக்குவரத்து சீரமைக்கவேண்டும் மேலும் சாலையின் ஓரத்தில் இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement


