புதுக்கோட்டை, ஆக. 17: புதுக்கோட்டை அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி ஒற்றைப்பனை அய்யனார் கருப்பர் கோயில் குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஏழு கிராமத்தார்கள் சார்பில் நடத்தப்பட்ட மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மதுரை சிவகங்கை திண்டுக்கல் தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 47 ஜோடி மாட்டு வண்டிகளும் 15 ஜோடி குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன. மாட்டு வண்டி போட்டி பெரிய மாடு சிறிய மாடு ஆகிய இரு பிரிவுகளிலும் குதிரை வண்டி போட்டி நடுக்குதிரை போட்டியாகவும் நடைபெற்றது. . பெரிய மாட்டு வண்டி பிரிவில் 9 ஜோடி மாட்டு வண்டிகளும் சிறிய மாட்டு வண்டி பிரிவில் 19 ஜோடி மாட்டு வண்டிகளும் நடுக்குதிரை இரண்டு சுற்றுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்றில் 10 குதிரை வண்டிகளும் இரண்டாம் சுற்று 9 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன.
+
Advertisement



