Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடை உடைத்து மதுபானங்கள் திருட்டு

புதுக்கோட்டை, ஆக. 17: சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானங்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை அடுத்த தெற்கு ராயப்பட்டி பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல விற்பனை முடிந்ததும் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் கடையின் மின் இணைப்பு ‘பீஸ் கேரியரை கழற்றி எரிந்து விட்டு, சட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த விலை உயர்ந்த மதுபானங்களை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர். நேற்று காலை அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள், டாஸ்மாக் கடையின் சட்டர் திறக்கப்பட்டிருப்பதைப் பார்த்து டாஸ்மாக் ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.