கறம்பக்குடி, ஆக. 17: கறம்பக்குடி அருகே பட்டமா விடுதி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் 12 பேருக்கு 3.30 லட்சம் மதிப்பில் உதவிதொகை மாவட்ட கலெக்டர் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பிலாவிடுதி ஊராட்சி பட்டமா விடுதி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் விநாயகர் கோயில் அருகே மாவட்ட கலெக்டர் அருணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
+
Advertisement



