Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதுக்கோட்டையில் நாளை 80-வது சுதந்திர தின விழா: ஆயுதப்படை மைதானத்தில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை ; மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு

புதுக்கோட்டை, ஆக. 14: நாளை இந்தியாவின் 80 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆயத்த பணியை செய்து வருகின்றனர். இந்தியாவின் 80 வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் நாளை கொண்டாடப்படவுள்ளது. டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய தேசிய கொடியை ஏற்றுவார். இதபோல் தமிழகத்தில் தமிழக முதல்வர் விஜய் தேசிய கொடியை ஏற்றுவார். இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் கலெக்டர் அருணா தேசிய கொடியை ஏற்றிவைக்க உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக சார்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கொடிகம்பங்களை சரி செய்து அதற்கு வர்ணம் பூசி தயார் நிலையில் போலீசார் வைத்துள்ளனர். மேலும் சுதந்திரதின விழாவின் போது சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். இதில் வருவாய்துறை, போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் இடம்பெறுவார்கள். இந்த பட்டியல் தயாரிக்கும் பணியில் சில முக்கிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றியபிறகு எஸ்பி ரவீந்தர குமார் குப்தா தலைமையில் போலீஸ் அணிவகுப்பு நடைபெறும். இதனை கலெக்டர் ஏற்றுக்கொள்வார்.

இந்த ஒத்திகையும் தொடர்ந்து ஒரு வாரகாலம் நடைபெற்று வருகிறது. இதபோல் கலை நிகழ்ச்சிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கலை நிகழ்ச்சிகளில் எந்ததெந்த பள்ளிகள் பங்கேற்கும் எந்த நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்பதை அதிகாரிகள் இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகினறனர். இதற்கு பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் உறுதுனையாக இருந்து வருகின்றனர். இதபோல் பள்ளிகளில் நடைபெறும் சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகளில் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திரதினம் அன்று பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வரும்போது அணிந்து வருவதற்கு தேசிய கொடி பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு விருந்தினர்களை யாரை அழைப்பது எப்படி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதபோல் பல்வேறு அரசு துறை அலுவலர்கள், தனியார் நிர்வாகத்தினர் என சுதந்திர தினவிழாவை கொண்டாடுவதற்கான பணிகளில் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திரத்தினத்தில் மாவட்டத்தில் எந்த வித அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் இருப்பதற்கு பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம், புதுக்கோட்டை ரயில்நிலைம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து ரயில் நிலையங்களில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அலுவலங்களில் பாதுகாப்பு பணியை அதிகரித்துள்ளனர்.