Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கந்தர்வகோட்டை கடைவீதியில் சுற்றிதிரியும் நாய்களால் மாற்றுத்திறனாளி அவதி

கந்தர்வகோட்டை, ஜூலை 13: கந்தர்வகோட்டை கடைவீதியில் சுற்றிதிரியும் நாய்களால் மாற்றுத்திறனாளிகள் அவதியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகருக்கு உள்ளூர் மக்களும், வெளியூர் மக்களும் ஆயிரக்கணையில் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் தெரு நாய்கள் கடைவீதிகளிலும், தெருக்களிலும் சுற்றுகிறது. இவைகள் வீடுகளில் வளர்க்கும் கோழி, ஆடுகளை கடித்து கொன்று விடுகிறது. அதன்பிறக வழிப்போக்கர்களை கடித்து விடுவதால் இப்பகுதி அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் நாய்கடி ஊசி போடபடுகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது குறுக்கே நாய்கள் செல்லுவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நாய்களால் பெரும் தொல்லை ஏற்படுகிறது. எனவே கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களின் எண்ணிக்கைகளை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.