Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பொதுமக்கள் கோரிக்கை: கறம்பக்குடி அருகே சேதமடைந்த சாலை சீரமைக்க வலியுறுத்தல்

கறம்பக்குடி, ஜூலை 13: கறம்பக்குடி அருகே சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளது. செங்கமேடு ஊராட்சியில் உள்ள மணமடை கிராமத்திலிருந்து திருப்பாகோவில் வழியாக ஒடப்பவிடுதி கிராமத்திற்கு செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டு செயல்பட்டது.

இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் பயன்பெற்றனர்.

திருப்புக்கோயில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டு ஜல்லி கற்கள் பெயர்ந்து விபத்துகளை அடிக்கடி ஏற்படுத்தி விடுகின்றது. அந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் அனைத்து தரப்பினரும் செல்வதற்கு பயன்படுத்துகின்றனர். எனவே நலன் கருதி திருப்பகோவில் மக்கள் நலன் கருதி பழுதடைந்த தார் சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.