Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ண்மாயில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கந்தர்வகோட்டை சந்திர செட்டிகுளத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை விரைவில் அகற்ற வேண்டும்

ககந்தர்வகோட்டை, ஜூலை 13: கந்தர்வகோட்டை சந்திர செட்டிகுளத்தில் கரையில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்ற வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் அரவம்பட்டி சாலையில் சத்திர செட்டியார் குளம் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த குளம் பண்டைய காலமுறையில் செம்பர கற்கள் கொண்டு அழகியபடி துறை ஆண்கள், பெண்கள் துணி துவைக்கவும், குளிப்பதற்கும் தனிதனியாக அமைந்து இருந்தனர். இதில் மக்கள் பயன்படுத்தும் குளத்திற்கு வரத்து வரியும், குளம் நிரம்பிய உடன் உபரிநீர் வெளியேர வடிகால் வசதியும் செய்து இருந்தனர். இந்த குளத்தில் நூற்றுகணக்கன மக்கள் தினசரி குளித்தும் துணி துவைத்தும் வருகிறார்கள்.

ஆனால் மக்கள் பயன்படுத்தும் படி துறை உடைந்து துணி துவைக்க முடியாமல் உள்ளது என்று இப்பகுதி பெண்கள் கூறுகிறார்கள். இந்த குளத்துக்கு பண்டைய வரலாறு பெரியவர்கள் கூறும்போதும் அன்ன சத்திரத்துடன் கூடிய குளம் என்பதால் பூம்புகார் நகரில் இருந்து மதுரைக்கு வசதி வாய்ப்பு உள்ள குடும்பத்தில் பிறந்த கண்ணகியும். அவரது கணவர் கோவலனும் தொழில் செய்ய மதுரை சென்ற போது இங்கு உள்ள அன்னசத்திரத்தில் தங்கி இந்த குளத்தில் நீராடியாத கூறுகிறார்கள். இவ்வாறு சிறப்புமிக்க குளத்தில் கரைகளில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து குளத்தில் கரைகளில் பொதுமக்கள், பெண்கள், செல்ல முடியாத நிலையில் புதர்போல் மண்டிக்கிடக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் கூறியபடி அரசு நிலத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து குளத்தில் கரையை மக்கள் பயன்பட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.