புதுக்கோட்டை, ஆக. 12: புதுகை அரசு கல்லூரியில் போதைப்பழக்கத்திற்கு ஏதிரான கலெக்டர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அரசு அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டு போதைப்பழக்கத்திற்கு ஏதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்று, போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன், நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன், மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரைகளை வழங்குவேன், போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன், போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத்துணை நிற்பேன், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன் என்று உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
முதலமைச்சர் தலைமையில் முன்னெடுக்கப்படும் ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி ரவீந்திர குமார் குப்தா, புதுகை ஆர்டிஓ பிரகாஷ், இணை இயக்குநர் பெரியசாமி, உதவி ஆணையர் கலால் தர், டிஆர்ஓ சண்முகம், டிஎஸ்பி பிருந்தா, மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் மற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



