வெண்டைக்காய் விற்பனைக்கு தயார் பொன்னமராவதி அருகே 100 நாள் வேலை பணி குளம் வெட்டும் போது பழங்கால நாணயம் கண்டெடுப்பு
பொன்னமராவதி, ஆக. 12: பொன்னமராவதி அருகே 100 நாள் வேலை பணிகள் நேற்று நடைபெற்ற போது பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சேரனூர் கிராமத்தில் பெரிய கருப்பர் கோயில் அருகே 100 நாள் வேலை விபி ஜீராம் என்ற தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிய குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றது. நேற்று மண்வெட்டிகள் மூலம் மண்வெட்டும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். அப்போது பழங்கால உலோக வெண்களத்திலான சாமி மற்றும் பாம்பு புகைப்படம் பொறிக்கப்பட்ட பழங்காலத்து வெண்கலத்திலான 510 உலோக நாணயம் கிடைக்க பெற்றது.
இதனையறிந்த பணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பணித்தளப்பொறுப்பாளர்கள் விரைவில் ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி ஆணையர் அரசமணி சேரனூர் சென்று குளம் வெட்டும் பணி நடை பெற்று வரும் இடத்திற்கு சென்று உலோக நாணயம் கிடைக்கப்பட்டதை பார்வையிட்டார். பின்னர் அந்த நாணயத்தை ஊராட்சி செயலாளர் முருகவேல் மற்றும் 100 பணியார்கள் முன்னிலையில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்த நாணயம் பொன்னமராவதி தாசில்தார் பழனிச்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நாணயம் பழங்கால செப்புகாசுகள் என்றும், உலோக நாணயம் என்றும் கூறப்படுகிறது. சேரனூர் ஊராட்சி சேரனூர் கிராமத்தில் குளம் வெட்டும் போது பழங்கால நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த இடத்தினை தொல்லியியல்துறை மற்றும் வரலாற்று ஆராய்ச்சத்துறையினர் பார்வையிட்டு அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என முன்னாள் ஊராட்சித்தலைவர் கைவேலிப்பட்டி காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.



