புதுக்கோட்டை, டிச.10: பொன்னம்பட்டியில் உள்ள குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் கலிங்கியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இவர் யார் என்று போலீசார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை அடுத்த பொன்னம்பட்டியில் உள்ள குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் கலிங்கியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற கணேஷ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் நளினி மற்றும் போலீசார் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக இந்த பகுதிக்கு வந்தார், மேலும் இவரை யாரேனும் அடித்து கொலை செய்து விட்டு குளத்தில் வீசினார்களா, அல்லது குடிபோதையில் குளத்தில் விழுந்து விட்டாரா, என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


