பொன்னமராவதி, ஆக. 10: பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நடைபயண பிரச்சாரம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் நேற்று நடைபெற்ற பிரசாரத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலர் ஏனாதி ராசு தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதில் கொப்பனாபட்டி ஊராட்சிக்குட்பட்ட முக்கிய வீதிகளில் பிரசாரத்தில் உலகில் அமைதி நிலவ வேண்டும். அமெரிக்காவின் ஆயுத போர் வெறியை நிறுத்த வேண்டும். வெறுப்பு அரசியலை விதைக்ககூடாது. மதச்சார் பின்மை சமூக நீதி காத்திட வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உரிமையை பறிக்க கூடாது.




