ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் ஓய்வூதியத்தை டிஏபிஎஸ்எஸ் திட்டத்தில் இணைக்க தீர்மானம்
புதுக்கோட்டை, ஆக. 10: புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மார்த்தாண்டபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்கத்தின் வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகள் நிர்வாகிகள் வழங்கினர். அதன்பிறகு மாநில பொதுக்குழு கூட்டத்தில் ஏழு அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அதில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்கி ஊதியம் அரசு கருவூலம் மூலம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சிகள் மூலம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் டிஏபிஎஸ் எஸ் திட்டத்தில் இணைக்க வேண்டும், கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம ஊராட்சியில் பணிபுரியும் கணினி இயக்குனர்களுக்கு மாத ஊதியம் 10,000 வழங்க வேண்டும், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கத்திற்கு புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பின்னர் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ரங்கராஜ் தெரிவித்ததாவது: பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



