திருமயம், ஆக. 10: திருமயம் அருகே நாகநாதர் கோயில் முன்னறிவிப்பு இல்லாமல் நடை அடைப்பு திரளான பக்தர்கள் வேதனை அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தளமான நாகநாதர் கோயில் உள்ளது. இங்கு வழிபாடு நடத்துவதன் மூலம் திருமணத் தோஷம் நீங்கி, குழந்தை பேரு கிடைப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனால் இங்கு புதுக்கோட்டை மட்டுமல்லாது சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பகுதிகளிலிருந்து நேர்த்திக்கடன் வைத்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதேசமயம் விசேஷ காலங்களில் அதிக அளவு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
+
Advertisement




