Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு

புதுக்கோட்டை, ஜூலை 9: புதுக்கோட்டை நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர்கள் நியமனம் செய்யக் கோரியும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமனம் செய்யக் கோரியும் வக்கீல்கள் நேற்று நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 31 நீதிமன்றங்களுக்கும் அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், 21 அரசு வக்கீல்களுக்கான அரசாணை செவ்வாய்க்கிழமை வெளியானது. மீதமுள்ள 10 நீதிமன்றங்களுக்கான அரசாணை வெளிவரவில்லை. அதேபோல, சுமார் 15 நாட்களாக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. இவற்றால் நீதிமன்றத்தின் இயல்பான பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி புதுக்கோட்டை வக்கீல்கள் சங்கம் சார்பில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் முத்தையன் தலைமை வகித்தார். இதில் வக்கீல்கள் பலர் கலந்துகொண்டனர்