Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளிய வர முடியலப்பா.... சிறுமிக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் வாலிபரை கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை

இலுப்பூர், ஜூன் 8: இலுப்பூரில் தூக்கு மாட்டி இறந்த இளைஞரின் இறப்பிற்கு காரணமான நபரை கைது செய்யக்கோரி இறந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல் செய்த சம்பவம் இலுப்பூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் அருண்குமார் (19). பிளஸ் டூ வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு அவர் வீட்டில் இருந்த செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இந்த விஷயம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிய வரவே அந்த நம்பரை வைத்து அருண்குமார் வீட்டிற்கு சென்று சிறுமியின் தந்தை அரசு ஜீப் டிரைவர் சுப்பிரமணி (45) நேற்றுமுன்தினம் கண்டித்து உள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அருண்குமார் வீட்டில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த இலுப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று மதியம் அருண்குமாரின் உறவினர்கள் இலுப்பூர் காவல் நிலையம் வந்து, அருண்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையம் முன்பு சாலை மறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் விராலிமலை காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சுப்ரமணியை கைது செய்துள்ளதாக கூறியதைடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் இலுப்பூர் -விராலிமலை சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாலிபரின் இறப்பிற்கு காரணமான நபரை கைது செய்யக்கோரி இறந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல் செய்த சம்பவம் இலுப்பூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.