திருமயம், செப்.8: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் துணை மின் நிலையத்தில் இன்று அவசரகால பராமரிப்பு பணிக்காக இன்று மின் நிறுத்தம் நடைபெற உள்ளது என திருமயம் கோட்டம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கூறியதாவது, அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர், வெட்டுக்காடு, பொந்துபுளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என திருமயம் கோட்டம் உதவி செயற்பொறியாளர் (பொ) அசோக் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தவிர்க்க முடியாத காரணங்களால் மின் நிறுத்த அறிவிப்பில் மாற்றம் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


