பொன்னமராவதி,ஆக.8: பொன்னமராவதி அருகே ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருமயம் குறுவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருமயம் குறுவட்ட அளவிலான போட்டிகள் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கபாடிப்போட்டி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இறுதிநாளான நேற்று ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. பொன்னமராவதி தாசில்தார் பழனிச்சாமி, தலைமையாசிரியர் நாச்சம்மை ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
+
Advertisement



