பொன்னமராவதி,செப்.7: பொன்னமராவதி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை, போலீசார் விசாரணை நடத்திவருகின்றார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் மகள் ரோகினி(17). இவர் 12ம்வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் படிப்பதற்கான காத்திருந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளார். வெளியில் சென்று வீடு திரும்பி பெற்றோர்கள் தூக்கில் தொங்கி இறந்த தனது மகளை பார்த்து கதறி அழுதுள்ளனர்.
பின்னர் இது குறித்து பொன்னமராவதி காவல்நிலையத்தில் ரோகினியின் தாயார் போதும்பொண்ணு புகார் செய்துள்ளார். இதன் பேரில் போலிசார் கருப்புக்குடிப்பட்டி சென்று ரோகினியின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் 17வயதே ஆன இவர் ஏன் இறந்தார். என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


