Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கந்தர்வகோட்டை பகுதியில் புதிய இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கிடையாது: விதிமுறைகளை கடைபிடிக்க காவல்துறை அறிவுறுத்தல்

கந்தர்வகோட்டை, செப்.7: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னட்டு விநாயாகர் சிலைக்கு பிரஷ்டை செய்யபட்டு மூன்று தினங்கள் தொடர் வழிபாடு செய்து பிறகு அனைத்து சிலைகளும் ஒரு இடத்தில் சேகரித்து ஊர்வலம் ஊரில் முக்கிய வீதிவழியாக சென்று அமராவதி உடனுறை ஆபத்சாயேஸ்வரர் ஆலய குளத்தில் கரைப்பது வழக்கம். இதைபோல் நிகழாண்டு செய்ய காவல்துறை ஆய்வளர் விஜய்கோல்டன்சிங் தலைமையில் விழா குழுவுடன் ஆலோசனை நடத்தினர்.

இதில் சிலையின் உயரம் என்ன, எந்த பொருளால் தயாரிக்கப்பட்டது, எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது, சிலைகளை தயாரிப்பவர்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றின் விவரத்தினை சிலை அமைப்பாளர் தெரிவிக்க வேண்டும். மேலும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலை பாதுகாப்பிற்காக தங்களது பொறுப்பில் இருக்கும் தொண்டர்கள் 10 அல்லது 20 நபர்களின் விலாசம், செல்போன் நம்பர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அமைத்திட வேண்டும். சிலைக்கு தகரத்தாலான நிழற்குடை அமைத்திட வேண்டும். சிலை அருகே நீர், மணல் நிரப்பப்பட்ட வாளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை இதற்கு முன்பு ஊர்வலமாக எடுத்துச் சென்ற வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படும்.

புதிய இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி கிடையாது. ஊர்வலத்திற்கு வாகனத்தில் வருபவர்கள் காவல்துறையினர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் தங்களது வாகனங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிரச்னைகள் ஏற்படும் இடங்களில் காவல் துறையினர் உத்தரவை கடைபிடிக்க வேண்டும், குறித்த நேரத்தில் நிகழ்ச்சி முடியவேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் விசு, திரிசங்கு, சினிவாசன் மற்றும் விழா குழுவினர் கலந்துகொண்டனர்.