Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அன்னவாசல் அருகே குறுவட்ட அளவில் கபடி போட்டி

இலுப்பூர் ஆக 7: அன்னவாசல் அருகே குறுவட்ட அளவில் கபடி போட்டி நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் குறு வட்ட அளவில் முதல் இடத்தை பெற்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடை பெற்று வரும் குறுவட்ட அளவிலான போட்டிகள் இலுப்பூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் இலுப்பூர் குறு வட்ட அளவில் உள்ள பள்ளிகள் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாண்டு வருகின்றனர்.

இந்த போட்டிகளில் கால்பந்து, கூடை பந்து, குத்து சண்டை சிலம்பாட்டம் கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் அன்னவாசல் மற்றும் விராலிமலை பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இதில் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலை பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கபாடி போட்டியில் முதலிடம் பெற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் இந்த மாதம் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஆசிரிய ஆசிரியர்கள் பாராட்டினர்.