Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கந்தர்வகோட்டை அருகே மாணவிகளுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கந்தர்வகோட்டை, ஆக. 7: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியை சுகன்யா தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பள்ளி வளாகத்தில் தொடங்கி வைக்கபட்டது. பள்ளியில் துவங்கிய மாணவிகள் பேரணி பேருந்து நிலையம் வந்து அடைந்து மீண்டும் ஊரில் முக்கிய வீதி வழியாக பள்ளி வந்தடைந்தது. பின்னர் மாணவிகள் ஊர்வலம் சென்றபோது போதை இல்லாத உலகதை உருவக்குவோம் எனவும், போதை ஒழிப்பில் தன்னார்வத்துடன் ஒவ்வொருவரும் பங்கு கொள்வோம் எனவும் போதை பழக்கத்தால் குடும்ப நிம்மதி அழிந்து விடுகிறது எனவும் கோஷம் எழுப்பினார். மேலும் தனிமனித ஒழுக்கம் போதை இல்லாத நாடாக மாறும் என்று கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜெயகுமார், பாரதி, உதவி தலைமை ஆசிரியை பொன்னி, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஆசிரியை சக்திதேவி மற்றும் அனைத்து ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் கந்தர்வகோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.