Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கேஸ் தட்டுப்பாட்டால் கந்தர்வகோட்டை பகுதியில் தடுமாறும் ஓட்டல்கள்

கந்தர்வகோட்டை, மே 7: கேஸ் தட்டுப்பாட்டால் கந்தர்வகோட்டை பகுதியில் தடுமாறும் ஹோட்டல் உரிமையாளர்கள் உணவு பொருட்கள் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்தது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் சமையல், வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பாரத் கேஸ் ஏஜென்சி மூலம் வீடுகளில் பயன்பட்டிற்கு சமையல் கேஸ் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் ஹோட்டல், டீ கடை போன்றவற்றிக்கு மானியம் இல்லா கேஸ் சிலிண்டர் வழங்கிவந்தனர். மேலும் தனியார் கேஸ் கம்பெனிகளும் உணவகங்களுக்கு சிலிண்டர் வழங்கிவந்தனர். அமெரிக்கா வளைகுடா போரால் இந்தியாவிற்கு வரவேண்டிய கேஸ், பெட்ரோல் போதிய அளவு வரதாதல் சில மாதங்காளகவே கேஸ்தட்டுபாடு பெரும் அளவில் உள்ளது. வீட்டு உபயோகத்திற்கு கேஸ் சிலிண்டர் வாங்டகி 25 நாட்களுக்கு பிறகுதான் மறுபடியும் முன்பதிவு செய்ய முடியும் என்றநிலை உள்ளது.

இதனால் உணவகங்களில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. கந்தர்வகோட்டை பகுதிகயில் அதிகாலை முதல் இரவு வரை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், வியாபாரிகள், பயணிகள் டீ மற்றும் சிற்றுண்டி அருந்துவது வழக்கம், சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஒருசில கடைகள் மூடப்பட்டதால் அனைத்து ரெகுலர் கஷ்டமர்கள் மத்தியில்கடும் அதிச்சியை ஏற்படுத்தியது. சில உணவுகள் உற்பத்தி குறைக்கபட்டு விலைஉயர்வு செய்துள்ளது. பூரி, தோசைக்கு, அசைவ உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள் ஹோட்டல் உரிமையாளர்கள்.

இட்லி விற்பனை குறைக்கபட்டுள்ளதாக வடிக்கையாளர்கள் கூறுகிறார்கள். டீ, காபி, பலகாரம் விலை நாளுக்கு நாள் கூடுகிறது. நடுதர மக்கள் சிரமம் அடைகிறார்கள். ஹோட்டல் உரிமையாளர்கள் கேஸ் கிடைக்கதாதல் விறகு அடுப்பு, ரக்கெட் அடுப்பு, மின் அடுப்பு மூலம் சமையல் செய்து வருகிறார்கள். மக்களை விலைவாசி உயர்வில் இருந்து உடனே காக்க ஒன்றிய மோடி அரசு கேஸ் தட்டுபாட்டை தவிர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறார்கள்.