Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரிமளம் அருகே; தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

திருமயம்.நவ.3: அரிமளம் அருகே தென்னை விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரத்திற்கு உட்பட்ட தெக்கூர் கிராமத்தில் செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சியின் ஒரு பகுதியாக தென்னை விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் “தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் தென்னை ருகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்கம், அறிகுறிகள் மற்றும் மேலாண்மை முறைகள்” என்ற தலைப்பில் விவசாயிகள் பயிற்சி நேற்று வழங்கப்பட்டது.

தென்னை விவசாயி சொக்கலிங்கம் பண்ணையில் தென்னையில் நடைபெற்ற பயிற்சியின் போது மண் வளத்தைப் பாதுகாத்து, சீரான வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் பெறுவதற்கான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக, பூச்சி மேலாண்மையில் தென்னை ருகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்கம், அதன் அறிகுறிகளான இலைகளின் அடிப்பகுதியில் வெள்ளை நிற ஈக்கள் காணப்படுதல், இலைகளில் சுருள் வடிவில் காணப்படும் சேதங்கள், தேன் போன்ற பிசின் வெளியேற்றம் ஆகியவை குறித்து விளக்கியதோடு அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய மேலாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது. இப்பயிற்சியின் மூலம் தென்னை விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அறிவியல் சார்ந்த சாகுபடி முறைகளைப் பின்பற்றுவதற்கு பயனுள்ளதாக அமைந்தது.