Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உள்ளாட்சி தினத்தையொட்டி புதுக்கோட்டையில்; சிறப்பு கிராம சபைக்கூட்டம்

புதுக்கோட்டை, நவ. 2: புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், பிராமணவயல் ஊராட்சி, கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், உள்ளாட்சி தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற கிராம சபைகூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக, கலெக்டர் அருணா கலந்து கொண்டார்.

இக்கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பேசியதாவது;

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்களின் பங்கு அவசியம் என்பதற்கு இங்கு அதிகமாக வந்திருக்கக் கூடிய பெண்களே சாட்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றிப் பயணம் திட்டம், காலை உணவு விரிவாக்க திட்டம் என பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்க. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் மூலம் ஒரு நாளைக்கு 50,000 குழந்தைகள் பயன்பெறுகின்றனர். இது கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்கு உதவியாக இருக்கும். அதேபோன்று மாணவர்கள் தங்களது வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கிராமப்புற மக்களுக்கு உதவியாக 14 வகையான கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.

பிராமணவயல் ஊராட்சியில் 45 பணிகள் ரூ.15 லட்சம் செலவில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சுற்றுச்சுவர், சாலை வசதி, மின்சார வசதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மக்களின் கோரிக்கையினை ஏற்று மயானத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் கூடாரமும், நியாய விலைக்கடை கொண்டு வருவதற்கும் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் பேசினார்.

முன்னதாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு உதவி நிதி காசோலையினை கலெக்டர். அருணா, வழங்கினார். இக்கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர். லோகநாயகி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ராமமூர்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர். சித்ரா, மகளிர் திட்ட அலுவலர். பாலசுந்தரம், மாவட்ட சமூக நல அலுவலர். சியாமளா, விவசாயிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.