Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அறந்தாங்கி அருகே அரசு கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்

அறந்தாங்கி, அக். 2: புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே பெருநாவலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சரளா தொடங்கி வைத்தார். அதன்பிறகு அரசு மருத்துவமனை ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையத்தின் ஆலோசகர் மணி எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். அம்மையத்தின் தொடர்புப்பணியாளர் காளீஸ்வரி விளக்கவுரையாற்றினார். முன்னதாக கல்லூரி செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலமுருகன் வரவேற்றார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.