Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பொன்னமராவதி பகுதியில் கலர் கலரான பலூன் விற்பனை அமோகம்

பொன்னமராவதி, அக். 2: பொன்னமராவதி அண்ணாசாலை பகுதியில் கலர் கலரான விளையாட்டு பலூன்கள் விற்பனை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வட மாநிலத்தை சேர்ந்தவர் கம்பில் கலர் கலராக சிறுவர்கள் விளையாடும் பொம்மை விளையாட்டு சாமான்கள் போல விதவிதமாக பலூன்கள் பறக்க விட்டனர். இதனை பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆர்வமாக வாங்கி சென்றனர்.

ஒரு பொம்மை பலூன் ரூ.100 முதல் 50 வரை விற்பனை செய்தனர். கடும் வெயிலினை பொருட்படுத்தாமல் பொன்னமராவதி அண்ணாசாலை முழுவதும் 50க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண்கள் கம்பில் இந்த பலூன்களை கயிறு கட்டி பறக்க விட்டு விற்பனை செய்தனர். அதன்படி குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கி சென்றனர்.