Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இலுப்பூர் அருகே சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும்

இலுப்பூர், அக். 2: இலுப்பூர் அருகே சேதமடைந்த சாலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே கோத்திரப்பட்டி காரமேடு சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அதன்படி பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இச்சாலையில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் சேதமடைந்த சாலைகள் காலப்போக்கில் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகின்றன.

இச்சாலை கோத்திரப்பட்டி காரமேடு பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்து வருகின்றனர். தார்சாலை வெறும் ஜல்லி சாலையாக உள்ளதாலும், ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியமால் திணறுகின்றனர். ஆகையால் சேதம் அடைந்துள்ள இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.