Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காணும் பொங்கலை முன்னிட்டு திருத்தணி முருகன் வீதி உலா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருத்தணி: காணும் பொங்கலை முன்னிட்டு, முருகப்பெருமான் நகர முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் காணும் பொங்கலை முன்னிட்டு, முருகப்பெருமான் திருத்தணியில் நகர வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். காணும் பொங்கலயொட்டி நேற்று அதிகாலை மலைக்கோயிலில் இருந்து திருப்படிகள் வழியாக சரவணப் பொய்கை மற்றும் சன்னதி தெருவில் வாகன சேவையில் எழுந்தருளி நகர வீதியுலா நடைபெற்றது. அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை, பைபாஸ் ரோடு, காந்தி நகர் உட்பட நகரின் பல்வேறு முக்கிய வீதிகளில் வள்ளி தெய்வானை, சமேத உற்சவர் முருகப்பெருமான் 1008 தங்க வில்வ இலை மாலை மற்றும் தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி மேள தாளங்கள் முழங்க வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் தளபதி கே.விநாயகம் கல்வி அறக்கட்டளை தாளாளர் பாலாஜி குடும்பத்தினர் சுவாமியை வரவேற்று தீபாரதனை செய்து வழிபட்டனர். இதேபோல் திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதி, கோயில் இணை ஆணையர் ரமணி, நகர திமுக செயலாளர் வினோத் குமார், நகர்மன்ற உறுப்பினர் ஷியாம் சுந்தர் உட்பட முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் ஏராளமானோர் முருகப்பெருமானை தரிசித்தனர். தொடர்ந்து, மாலையில் பெரிய ரெட்டிகுளம் சண்முக தீர்த்தம் மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இரவில் சுவாமி மலைக்கோயில் சென்றடைந்தார்.