Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூரில் நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர், ஜன.6: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது, டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை 6 மணி முதல் விநாடிக்கு 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

நேற்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 130 கனஅடியாக நீடித்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் 101.81 அடியிலிருந்து 101.05 அடியாக குறைந்தது.