காவலர்கள் சிறப்பு குறைதீர் முகாம்; போலீஸ் கமிஷனர் அருண் நேரில் மனுக்கள் பெற்றார்: உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
Advertisement
அந்த வகையில், 4 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐக்கள் உட்பட 90 போலீசாரிடம் கமிஷனர் அருண் நேரடியாக மனுக்கள் பெற்றார். காவலர்கள் அளித்த புகார் மனுக்களில் பெரும்பாலானவை பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த சிறப்பு முகாமில் தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரட்கர், நிர்வாக பிரிவு துணை கமிஷனர் சுப்புலட்சுமி, காவலர் நலன் துணை கமிஷனர் மேகலினா ஐடன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Advertisement