சீமானை கண்டித்து பெரியார் தொழிலாளர் கழகம் ஆர்ப்பாட்டம்
குலசேகரம்,ஜன.21: பெரியார் குறித்து அவதூறாக விமர்சனம் செய்யும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து பெரியார் தொழிலாளர் கழகம் சார்பில் திருவட்டாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவட்டார் காவல் நிலைய சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெரியார் தொழிலாளர் கழக துணை செயலாளர் ரசூல் தலைமை வகித்தார். இதில் துணை ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், நாகர்கோவில் மாநகர செயலாளர் சாகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர். சட்ட ஆலோசகர் சிபு சிறப்புரையாற்றினார். பெரியார் தொழிலாளர் கழக தலைவர் நீதியரசர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
Advertisement
Advertisement