பெரம்பலூர்,அக்.30: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது என மாவட்டக் கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், மாவட்டக் கலெக்டர் அப்துல் ராசிக் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது.
பெரம்பலூரில் நடைபெற உள்ள அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடனுதவிகள், வேளாண்மை இடு பொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக் கப்படும். விவசாயிகள், விவசாயசங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம் என மாவட்டக் கலெக்டர் அப்துல் ராசிக் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


